தமிழ்நாடு

பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமானை எங்கும் நுழைய விட மாட்டோம்- த.பெ.தி.க.

Published On 2025-01-09 11:15 IST   |   Update On 2025-01-09 13:29:00 IST
  • சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
  • சீமான் தற்போது புதுச்சேரிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

* பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமானை எங்கும் நுழைய விட மாட்டோம்.

* சீமான் தற்போது புதுச்சேரிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு சென்று த.பெ.தி.க.வினர் ஆதாரம் கேட்க உள்ளனர்.

* பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News