ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- ஈ.வி.கே.எஸ் 2வது மகன் வேட்பாளராக நிறுத்த தீர்மானம்
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை பெறப்பட உள்ளது.
18-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.