தமிழ்நாடு

போராட வந்தவர்கள் பொறுக்கிகள்- நா.த.க. நிர்வாகி ஆவேசம்

Published On 2025-01-09 11:25 IST   |   Update On 2025-01-09 13:28:00 IST
  • சீமான் கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் நேருக்கு நேர் அமர்ந்து பேசுங்கள்.
  • கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து புகார் பதியப்படவில்லை என்றால் நாதகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவர்.

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முற்றுகையிட வந்தவர்கள் சீமான் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை த.பெ.தி.க.வினர் உடைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நா.த.க. நிர்வாகி கூறுகையில்,

* சீமான் வீட்டை முற்றுகையிட வந்தவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இல்லை பொறுக்கிகள்.

* தலைவர் சீமான் கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் நேருக்கு நேர் அமர்ந்து பேசுங்கள்.

* நேரில் பேசுவதற்கு திராணி இல்லாமல் பொறுக்கிகள் போல் செயல்படுகின்றனர்.

* கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து புகார் பதியப்படவில்லை என்றால் நாதகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று கூறினார்.

Tags:    

Similar News