தமிழ்நாடு

கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநர், கிளீனர் கைது

Published On 2025-01-08 18:47 IST   |   Update On 2025-01-08 18:47:00 IST
  • கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
  • ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு.

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது.

கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் தொடர்பாக தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News