சென்னையில் நுழைந்தது HMPV தொற்று- 2 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி
- கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் தொற்று பாதிப்பு.
- நாட்டில் மொத்தம் மொத்த எண்ணிக்கை 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை, கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலா 1 குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளிடமும் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளனர்.
இதில், எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் ஏற்கனவே 3 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் உறுதியான நிலையில், சென்னையில் 2 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.