தமிழ்நாடு

தமிழகத்தில் உருமாறிய HMPV தொற்று ஏதும் பரவவில்லை- சுகாதாரத்துறை

Published On 2025-01-06 18:35 IST   |   Update On 2025-01-06 18:35:00 IST
  • சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் பரவியதாக தகவல் வெளியான நிலையில் சுகாதாரத்துறை மறுப்பு.
  • எச்எம்பிவி வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது தான்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சீனாவில் பரவி வரும் எச்எம்பிவி தொற்றினால் தமிழகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் பரவியதாக தகவல் வெளியான நிலையில் சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் புதிதாக உருமாறிய எச்எம்பிவி வகை தொற்று ஏதும் பரவவில்லை.

எச்எம்பிவி வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது தான்.

தமிழகத்தில் பரவக்கூடிய எச்எம்பிவி வைரஸ் காய்ச்சல் என்பது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான்.

தற்போது தமிழகத்தில் இன்புளுவன்சா தொற்றுதான் அதிக அளவில் உள்ளது. கட்டுப்படுத்தும் அளவிலேயே பருவ கால காய்ச்சல் பாதிப்புகள் உள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News