செய்திகள்

வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில்-தேஜஸ் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Published On 2019-02-06 14:44 IST   |   Update On 2019-02-06 14:44:00 IST
வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் மற்றும் அதிவேக தேஜஸ் சொகுசு ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். #MetroTrain #PMModi
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல்-டி.எம்.எஸ். வரையிலான சுரங்க வழித்தடத்தில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பயணிகள் ரெயில் போக்குவரத்து வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

இதே விழாவில் சென்னை- மதுரை இடையேயான அதிவேக தேஜஸ் சொகுசு ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்.

மேலும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டிடத்தையும் தமிழகத்துக்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். #MetroTrain #PMModi
Tags:    

Similar News