தமிழ்நாடு

பெண் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை- திருப்பூர் பனியன் நிறுவன அதிபர் கைது

Published On 2022-10-20 04:18 GMT   |   Update On 2022-10-20 04:18 GMT
  • பழனிச்சாமி காலுக்கு எண்ணெய் தேய்த்து விட இளம்பெண்ணை அழைத்துள்ளார்.
  • அதிர்ச்சியடைந்த இளம்பெண் அறையில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தார்.

திருப்பூர்:

திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). பனியன் நிறுவன அதிபர். இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணும் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் பழனிச்சாமிக்கு கால் முறிவு ஏற்பட்டது. சம்பவத்தன்று நிறுவனத்திற்கு வந்த பழனிச்சாமி ஒரு அறைக்கு சென்றதுடன் முறிவு ஏற்பட்ட தனது காலுக்கு எண்ணெய் தேய்த்து விட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணை அழைத்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து தனி அறையில் வைத்து இளம்பெண் பழனிச்சாமி காலில் எண்ணெய் தேய்த்து விட்டார். அப்போது திடீரென பழனிச்சாமி இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அறையில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தார். உடனே அவரிடம் சக தோழிகள் நடந்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் தனக்கு நேர்ந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பனியன் நிறுவன அதிபர் பழனிச்சாமியை கைது செய்தனர். பெண் தொழிலாளிக்கு பனியன் நிறுவன அதிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News