தமிழ்நாடு
ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்கு இமானுவேல் சேகரனின் தொண்டு உரமாகட்டும்- மு.க.ஸ்டாலின்
- தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
- நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.