தமிழ்நாடு
விவசாயிகள் புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு
- நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம்.
நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனரின் எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்தியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் புகார்களை 9445257000 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.
புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.