தமிழ்நாடு (Tamil Nadu)

(கோப்பு படம்)

100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது வதந்தி- அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On 2022-11-18 12:13 GMT   |   Update On 2022-11-18 12:13 GMT
  • ஒரு நுகர்வோர் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும்.
  • 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எல்லா இடங்களிலும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரித்தார்.

மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News