தமிழ்நாடு

நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை- அமைச்சர் சிவசங்கர்

Published On 2024-01-05 17:56 IST   |   Update On 2024-01-05 18:00:00 IST
  • அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைபெற்றது.
  • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நிறைவு.

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுகடன் அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைபெற்றது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நிறைவுப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், " நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றார்.

அமைச்சர் சிவசங்கர் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெற போவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News