தமிழ்நாடு
தனியார் திருமண மண்டபம் மேற்கூரை இடிந்து விழுந்து மணப்பெண்ணின் தாய் உட்பட 10 பேர் படுகாயம்
- ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று இரவு திருமணம் விழா நடந்தது.
அப்போது பெண்கள் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மேற் கூரையில் அமைக்கப்பட்டு இருந்த பால்சீலிங் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் மணப்பெண்ணின் தாய் மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை ஆம்புலன்சு மூலம் திருமண நிகழ்ச்சியில் இருந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி மற்றும் ஆம்பூர் டவுன் போலீசார் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.