தமிழ்நாடு
ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு- தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேச்சு
- வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார்.
- தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தழிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இது தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.