ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது எப்படி ?- நீதிபதி கேள்வி
- ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிகரன், அருள் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தின் அப்பேத்கர் சிலை அருகே கார் பார்க்கிங்கில் வைத்து லஞ்ச் பேக்கில் நாட்டு வெடிகுண்டுகள் கைமாறியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது எப்படி ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், வெடிகுண்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.