தமிழ்நாடு

காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை வீடியோ காலில் ரசித்த காதலன் கைது

Published On 2023-04-21 10:41 IST   |   Update On 2023-04-21 10:41:00 IST
  • அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார்.
  • அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

திருவாரூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூரை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக அங்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டு தோழியுடன் அலுவலகத்திற்கு சென்றார்.

மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது தோழி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அர்ச்சனா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அர்ச்சனா கடைசியான பேசிய வீடியோகாலை பார்த்தனர். அதில் அவர் நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் வடகாட்டை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து சத்யராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அர்ச்சனாவும் சத்யராசும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். இதனால் அர்ச்சனா சத்யராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மனவேதனையில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

அந்த காட்சியை அவரது காதலன் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News