கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்காவிட்டால் அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
- பொது இடங்களில் குப்பைகளை கொட்டி நகரின் அழகை கெடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.
- பஸ் நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேகரிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி உள்ளது.
சென்னை:
சென்னையில் கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்கா விட்டால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
நகரில் குவியும் குப்பைகளை தரம் பிரிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்கவே மாநகராட்சி இந்த நட வடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 94 ஆயிரத்து 523 கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடைகள் அனைத்திலும், இரண்டு இரண்டு குப்பை பெட்டிகள் வாடிக்கையாளர்கள் பார்வையில் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். அதில் மக்கும் குப்பை போட வேண்டிய பெட்டி, மகத்தாத குப்பை போட வேண்டிய பெட்டி என்பதை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். தவறும் கடைகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.
முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை, தியாகராய சாலை உள்ளிட்ட சாலைகள் இதில் அடங்கும். இந்த சாலைகளில் 196 பஸ் நிறுத்தங்கள் உள்ளன.
பொது இடங்களில் குப்பைகளை கொட்டி நகரின் அழகை கெடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.
பஸ் நிறுத்தங்களில் வைப்பதற்காக 442 சிறிய குப்பை சேகரிப்பு பெட்டிகளை மாநகராட்சி வாங்கி உள்ளது.
இந்த பகுதிகளை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க கூடுதலான ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களை சுத்தமாக பராமரிக்கும் இந்த திட்டத்தை பொதுமக்கள் மிகவும் வரவேற்றுள்ளார்கள்.