தமிழ்நாடு

சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை புறக்கணிக்க அவசியம் என்ன? - நீலம் பண்பாட்டு மையம்

Published On 2024-12-22 13:36 GMT   |   Update On 2024-12-22 13:36 GMT
  • சென்னை உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த உணவு திருவிழா வரும் 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது

இந்நிலையில் சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறி நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News