தமிழகத்தில் 20, 21ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 19ம் தேதி வலுப்பெற கூடும் என்பதால், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
- காற்று 55 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் 21ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல தடை.
தமிழகம், புதுச்சேரியில் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 20,21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 19ம் தேதி வலுப்பெற கூடும் என்பதால், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்று 55 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் 21ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.