எனது அருமை நண்பர் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்- கமல்ஹாசன்
- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
- ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ முருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்சனையும் இருந்தது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஜினி காந்தை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் வெளியானதும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனையடுத்து ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கவர்னர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ முருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.