தமிழ்நாடு

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்- தேசிய மகளிர் ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை நிறைவு

Published On 2024-12-30 11:14 GMT   |   Update On 2024-12-30 11:14 GMT
  • தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
  • சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பல்கலைகழக நிர்வாகம் மற்றும் மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய விசாரணை நிறைவுபெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை முதல் சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. அப்போது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி விவரத்துடன் எப்ஐஆர் வெளியானது குறித்தும் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

Tags:    

Similar News