எங்களின் பிள்ளையை தாரைவார்க்கும் அவசியம் இல்லை - அமைச்சர் காட்டம்
- செய்தியின் உண்மைத்தன்மையை அறியாது அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.
- மத்திய அரசு நிதியை தராத நிலையிலும் நிதிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிகளை தத்தெடுப்பு, தாரைவார்த்தல் என்ற வார்த்தையை நான் குறிப்பிடவில்லை.
* நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அளித்தவர்களுக்கு நன்றி என்று தான் கூறினேன்.
* சிஎஸ்ஆர் நிதி மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு நன்றி என்றுதான் கூறியுள்ளேன்.
* அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
* தொடர் வதந்திகளால் நாங்கள் சோர்வடைகிறோம், நம்பகத்தன்மையுடன் செய்தி வெளியிடுங்கள்.
* எங்களின் பிள்ளையான அரசுப்பள்ளியை மற்றொருவருக்கு தாரைவார்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.
* தேவையின்றி பிரச்சனைகளை கிளப்பி கண்டன அறிக்கைகளை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
* செய்தியின் உண்மைத்தன்மையை அறியாது அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.
* சிஎஸ்ஆர் நிதி மூலமாக தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் தேசிய சராசரியை விட அதிகம்.
* கொள்கையை விட்டுக்கொடுத்து SSI நிதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* மத்திய அரசு நிதியை தராத நிலையிலும் நிதிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
* மாநில பட்டியலுக்கு எங்களின் கல்வியை தந்துவிடுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நிதிச்சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று கூறினார்.