பள்ளி விவகாரம்: தமிழக அரசு மறுக்கவில்லை.. அதனால் அறிக்கை வெளியிட்டோம்- கே.பாலகிருஷ்ணன் விளக்கம்
- 'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு’ என வெளியிட்ட அறிக்கை குறித்து தகவல்.
- நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.
'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு' என வெளியிட்ட அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
பத்திரிக்கையில் வரக்கூடிய செய்தியை அடிப்படையாக வைத்துதான் அறிக்கையோ அல்லது பதிலோ வழங்கவேண்டி இருக்கிறது.
அந்த செய்தியில், அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கிறார்கள் என தகவல் கிடைக்கிறது. அவ்வாறு யார் செய்தி போட்டார்களோ அவர்களை தான் கேட்க வேண்டும்.
நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.
இதுபோன்ற செய்தி வந்தவுடன் தமிழக அரசு அல்லது அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தால் நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை. அரசு, செய்தியை மறுக்காததால் எங்களுக்கு வேறு வழி இல்லை.
இன்றைக்கு தமிழக அரசு அவ்வாறு செய்யும் முடிவு இல்லை என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அவ்வாறு செய்தி வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.