தமிழ்நாடு

தி.மு.க.வினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர்- முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

Published On 2022-09-16 14:34 IST   |   Update On 2022-09-16 14:34:00 IST
  • தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
  • அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

உதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறங்களில் பெண்களை மேம்படுத்த ஆடு, மாடு, கோழிகள் வழங்கும் திட்டம், சுகாதாரத்துறையில் மினி கிளினிக் திட்டம் என பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இனிவரும் காலங்களில் தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கும் என இறுமாப்புடன் பேசி வருகிறார். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டம் காதுகளில் இடியாக விழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News