தமிழ்நாடு

புயல் எச்சரிக்கையால் முதலமைச்சர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

Published On 2023-12-01 14:50 IST   |   Update On 2023-12-01 14:50:00 IST
  • முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
  • விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News