தமிழ்நாடு

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்- நாளை மாலைக்குள் இறுதி சடங்கு செய்ய முடிவு

Published On 2022-07-22 13:35 IST   |   Update On 2022-07-22 13:38:00 IST
  • மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • ஐகோர்ட்டு உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற தாமதம் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி

சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மர்ம மரணம் அடைந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், மாணவியின் தந்தை தரப்பில் டாக்டர்கள் நிய மிக்கப்படாத தால், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இதற்கிடையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி டாக்டர்கள் குழு, மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தது. மறுபிரேத பரிசோதனை செய்த உடலை ஸ்ரீமதி பெற்றோரை வாங்கிக் கொள்ள உத்தரவிட கோரி அரசு தரப்பில் ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது.

அதற்கு அவர் மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்யவேண்டும். அதை படித்து பார்த்து அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை மாணவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

அதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர், மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பு வக்கீலிடம், இந்த ஐகோர்ட்டு மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? மகளை இழந்த மனுதாரர் ராமலிங்கம் மீது அனுதாபம் உள்ளது. அதற்காக ஐகோர்ட்டு உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற தாமதம் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

டாக்டர்கள் குழு அமைத்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட இந்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினையை ஏற்ப டுத்தக்கூடாது. அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மகளின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டக்கூடாது. மறுபிரேத பரிசோதனை தொடர்பான உத்தரவில், சுப்ரீம் கோர்ட்டு தலையிடவில்லை. அதனால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவது இல்லை.

வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை. இந்த வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை யோசித்து பார்க்க வேண் டும். அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

அப்போது குறுக்கிட்ட, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆலோசித்துள்ளார்" என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடு கின்றனர். அது மனுதாரர் தரப்பிற்கு தெரியாமலேயே நடந்துள்ளது. மாணவி மரணம் தொடர்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்பி உள்ளன. எனவே, மறு பிரேத பரிசோதனை செய்த அறிக்கையை புதுச்சேரியில் ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை அவர்களிடம் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மனுதாரர் தரப்பை பார்த்து, மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. எப்போது உடலைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? உடலை பெற்று கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்துங்கள். மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகி றேன். அவ்வாறு பெற்றுக் கொள்ளா விட்டால் காவல் துறை சட்டப்படி இறுதி சடங்குகளை நடத்தலாம். எனவே, உடலை எப்போது பெறுவீர்கள் என்ற விவரத்தை இன்று 12 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் ராம லிங்கத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது தந்தை ராமலிங்கம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலை நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெற்றுக் கொள்கிறோம். மாலைக்குள் இறுதி சடங்கு செய்து முடிப்போம்" என்று உத்தர வாதம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News