இடைத்தேர்தல் புறக்கணிப்பு தவறானது: சசிகலா
- ஈரோடு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என்பதால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்தத் தேர்தலில் தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது. பா.ஜ.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகின.
இதகிடையே, தமிழக வெற்றிக் கழகமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை போயஸ் கார்டனில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும்.
இன்று தி.மு.க. அரசாங்கம் வீண் செலவு செய்து கொண்டிருக்கிறது, உருப்படியாக எதையும் செய்வது இல்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை அவர்கள் செய்த அனைத்தையும் பாமர மக்களுக்குப் புரியும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.