தமிழ்நாடு
நாங்களா சாதி கட்சி நடத்துகிறோம்...? - திருமாவளவன் கேள்வி
- புதிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது இதை சுட்டிக்காட்டினார்.
- புதிய நிர்வாகிகளுக்கு 6 மாதம் கண்காணிப்பு காலமாம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சமீபத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவில் 144 பேருக்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் 16 பேர் தலித் அல்லாதவர்கள். 14 பேர் பெண்கள்.
புதிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது இதை சுட்டிக்காட்டினார். இதன்பிறகுமா எங்களை சாதி கட்சி நடத்துவதாக கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
புதிய நிர்வாகிகளுக்கு 6 மாதம் கண்காணிப்பு காலமாம். இந்த காலக்கட்டத்துக்குள் பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட சில செயல்திட்டங்களை திருமாவளவன் கொடுத்துள்ளார். அந்த பணிகளை திருப்திகரமாக செய்து முடித்தால்தான் மாவட்ட செயலாளர் பதவியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் பதவி பறிக்கப்படுமாம்.