தமிழ்நாடு

வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய-மந்திரி கிஷன் ரெட்டி ஆய்வு

Published On 2022-11-08 09:00 GMT   |   Update On 2022-11-08 09:00 GMT
  • மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.
  • ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி சென்று ஆய்வு செய்தார்.

சென்னை:

சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி இன்று ஆய்வு பணிகள் செய்தார்.

மத்திய சுற்றுலாத் துறை மந்திரி கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்தார். சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆய்வு பணிகளை செய்தார்.

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலில் ஏறி ஆலந்தூர் வரை பயணிகளுடன் அமர்ந்து பயணம் செய்தார்.

அப்போது மெட்ரோ ரெயில் பயணிகளிடம் கலந்துரையாடினார். மெட்ரோ ரெயில் பயணம் குறித்து கருத்து கேட்டார். மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மேலும் புதிய வசதிகள் செய்வது குறித்து உரையாடினார்.

அதன்பிறகு ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக், மற்றும் அதிகாரிகள் அர்ஜூன் அசோக்குமார், ஜெயராம் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கரு நாகராஜன், காளிதாஸ் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதியம் 12 மணிக்கு சோழிங்கநல்லூரில் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினை பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

Similar News