திருத்தணி முருகன் கோவிலில் ரூ.63 லட்சம் உண்டியல் வசூல்
- திருத்தணி முருகன் கோவிலுக்கு அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
- பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலுக்கு தமிழக மட்டும் அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் 13 நாட்களில் 63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரூபாய் ரொக்கம் மற்றும் 365 கிராம் தங்கம், 5357 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.