தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கான நிதி: நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On 2024-01-04 16:36 IST   |   Update On 2024-01-04 16:36:00 IST
  • சென்னையில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
  • அப்போது, மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளோம் என்றார்.

சென்னை:

சென்னை மேற்கு மாம்பலத்தில் இன்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் 'நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது.

மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குத்தான் கொடுத்துள்ளோம்.

வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

2014 முதல் 2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.

ஆனால் பெற்றதைவிட அதிகமாக அதாவது, ரூ.6.96 லட்சம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News