தமிழ்நாடு
இரணியல் அருகே கார் தீ வைத்து எரிப்பு- வாலிபர் கைது
- வெங்கடேஷ் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
- மதுபோதையில் அனீஸ்குமார் தான் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்பட்டது.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள குதிரைப்பந்தி விளை பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ்குமார் (வயது 28), தொழிலாளி.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (38). இவருக்கும் அனீஷ்குமாருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெங்கடேஷ் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் காரின் மேல்பக்கம் மற்றும் முன்பக்கம் சேதமடைந்தது.
மதுபோதையில் அனீஸ்குமார் தான் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து இரணியல் போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அனீஷ் குமாரை கைது செய்தனர்.