தமிழ்நாடு

தருமபுரி பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

Published On 2025-02-23 17:27 IST   |   Update On 2025-02-23 17:27:00 IST
  • தருமபுரி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
  • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 21 ஆம் தேதி இரவு தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை கண்டித்தனர்.

இதனால், கோபம் அடைந்த இளம்பெண்கள், கண்டித்த பயணிகளை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடமும் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர் அந்த பெண்கள் கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, கண்மணி ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News