அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஜன.27-ல் விசாரணை
- தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
- எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தகவல்களை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 27-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. முன்னதாக சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனை ஏழு நாட்கள் விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற்று காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல் துறையின் விசாரணையில் இருந்த ஞானசேகரன் திடீர் வலிப்பு ஏற்பட்டதாக கூற அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரவுக்கு அழைத்து செல்லப்பட்ட ஞானசேகரனுக்கு தலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.