தமிழ்நாடு

தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்

Published On 2025-01-24 11:36 IST   |   Update On 2025-01-24 12:01:00 IST
  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளால் அக்கட்சியிலிருந்து பலர் விலகினர்.
  • கட்சியில் இணைந்தவர்களுக்கு தி.மு.க. துண்டை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர். பெரியார் குறித்த சீமானின் சமீபத்திய பேச்சால் அதிருப்தியடைந்த சில மாவட்ட நிர்வாகிகளும் வெளியேறினர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளால் அக்கட்சியிலிருந்து விலகியவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்கள் 8 பேர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு தி.மு.க. துண்டை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.  

தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியார் சிலை பரிசாக அளித்தனர்.

Tags:    

Similar News