தமிழ்நாடு
அண்ணாவின் புகழ் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்- டி.டி.வி.தினகரன்
- தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா.
- தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று.
தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.