தமிழ்நாடு
FAIR DELIMITATION : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% ஒத்துழைப்பு - பகவந்த் மான்
- மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
- கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் பேசியதாவது:-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது. இதனால் தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும். இந்த நடவடிக்கை மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ? அங்கெல்லாம் அதனை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.