தமிழ்நாடு
சென்னை புழல் சிறை உள்பட 3 மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- சிறை வளாகங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள புழல் மத்திய சிறை மற்றும், திருச்சி, மதுரை மத்திய சிறைகளுக்கு தொலைப்பேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சிறை வளாகங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், தொலைப்பேசியில் சிறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.