தமிழ்நாடு

சென்னை எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-02-13 10:15 IST   |   Update On 2025-02-13 10:15:00 IST
  • எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
  • சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

எழிலக வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

பாலாஜி என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்ததையடுத்து அவரை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில் புரளி என தெரிய வந்தது.

Tags:    

Similar News