தமிழ்நாடு

கேல் ரத்னா, அர்ஜூனா விருது: குகேஷ் உள்ளிட்ட வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2025-01-02 14:21 GMT   |   Update On 2025-01-02 14:21 GMT
  • 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், விருது பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!

கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ஜூனா விருது பெற்றுள்ள துளசி மதி, நித்தியஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!

தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News