தமிழ்நாடு

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2025-01-22 18:07 IST   |   Update On 2025-01-22 18:07:00 IST
  • இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' நூல் வெளியீடு.
  • கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவை பகிர்ந்து "நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!" எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில் "இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக" எனப் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News