தமிழ்நாடு
மாநகர பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு.. இனி ஏ.சி.யிலும் பயணம்.. விரைவில் புதிய திட்டம்
- மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
- ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிக்க புதிய திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கொண்டு வர உள்ளது.
ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் இந்தி திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ரூ.1,000 மாத கட்டண திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதிய திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.