தமிழ்நாடு
இல.கணேசன் அண்ணன் மரணம்- முதலமைச்சர் இரங்கல்
- நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் இன்று காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
- உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் இன்று காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.கணேசனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.