தமிழ்நாடு
சுயநலவாதிகளாக மாறிய கம்யூனிச தலைவர்கள்: தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பரபரப்பு பேச்சு
- கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது.
- கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டனர் என்றார்.
சென்னை:
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கம்யூனிச கொள்கை தோற்றுப்போய் விட்டது.
கம்யூனிசத்தில் கோளாறு இல்லை, கம்யூனிசம் செம்மையானது.
கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போனது.
சி.பி.எம். முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சமீபத்தில், தமிழகத்தில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளதா என தமிழக அரசை கேள்வி கேட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.