பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்
- ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
- செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
* தொடர்ந்து செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றை டிரைவர் ஒருவர் ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மறு கையில் பஸ்சை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமானது, கையில் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணி மனையை சேர்ந்த டிரைவர் கனகராஜ் என்பதை கண்டறிந்தது. அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் சென்றபோது செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கனகராஜை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டுள்ளது.