வனத்துறையினருக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது
- கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது.
- வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோ பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, போலீசார், மது விலக்குப் பிரிவினர் கல்வராயன் மலை பகுதியில் அதிரடி சோதனைகள் நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கைது செய்தனர்.
கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. விவசாயப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா விளைவிப்பது என அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் ஏராளமாக நடைபெறும் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் கல்வராயன் மலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1600 கஞ்சா செடிகளை வளர்வதாக தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
1600 கஞ்சா செடிகளை வளர்த்ததாக 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு 104 கிலோ கஞ்சா செடிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.