தமிழ்நாடு

தி.மு.க.வை பின்பற்ற தொடங்கி இருக்கிறது பா.ஜ.க. - கனிமொழி

Published On 2025-01-18 08:25 IST   |   Update On 2025-01-18 08:56:00 IST
  • கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக முதலமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
  • தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கிராமிய கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் மீண்டும் சென்னை சங்கமத்தை தொடங்கி நடத்திக்கொண்டு இருக்கிறார்.

8 மாவட்ட தலைநகரங்களில் கிராமிய கலை விழாக்களை நடத்த நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள். மேலும் இதை விரிவுபடுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக முதலமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

கிராமிய கலை விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மக்களுடைய ஆதரவு பெருகிக்கொண்டு இருப்பது, கிராமிய கலைஞர்களுக்கு பெரிய உந்துசக்தியாக உள்ளது.

டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு,

தி.மு.க.வை பா.ஜ.க. பின்பற்றத் தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் பல்வேறு முக்கிய திட்டங்களை இன்று மற்ற மாநிலங்களும் பின்பற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது பா.ஜ.க.வும் பின்பற்ற தொடங்கி இருக்கிறது வாழ்த்துகள் என்று கூறினார்.

Tags:    

Similar News