மகளிர் உரிமை தொகை... விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதலமைச்சர்
- இத்திட்டத்தில் சேர இன்னும் பலர் விண்ணப்பித்து உள்ளனர்.
- புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரேசன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் ஒரு கோடியே 14 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் சிலர் தகுதி இருந்தும், இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து காத்துக் கிடக்கின்றனர்.
இதை தொடர்ந்து இத்திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இந்த நிலையில், புதிய பயனாளிகள் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.