தமிழ்நாடு
தமிழகத்துக்கு செயற்கையான நிதி நெருக்கடி தரும் செயலை மத்திய அரசு செய்கிறது- அமைச்சர் குற்றச்சாட்டு
- மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
- போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அளித்த பேட்டி வருமாறு:-
ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி பட்டியலைத்தான் நான் வெளியிட்டுள்ளேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒன்றிய அரசிடம் சென்று நிதியை வாங்கி வரவேண்டியது தானே. அதை விட்டு விட்டு உங்கள் கட்சி செய்யும் தவறுகளை நியாயப்படுத்தலாமா? மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
ரூ.2155 கோடி பணத்தை கொண்டு வந்து கொடுங்கள். போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு செயற்கை நிதி நெருக்கடி செயலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.