தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய வீடுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன- அமைச்சர் முத்துசாமி

Published On 2025-01-09 14:00 IST   |   Update On 2025-01-09 14:00:00 IST
  • கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது.
  • அவற்றில் 2,212 வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

சட்டசபையில் காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம் கட்டித் தரப்படுமா? என்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-

காஞ்சிபுரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குடியிருப்புகள் 60 இடங்களில் மிக மோசமாக இருந்த நிலையில் அவற்றை இடித்து வீட்டுவசதி வாரியம் மூலம் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் வீடுகளுக்கான தேவை குறித்து தகவல் வாங்கி அவர்கள் குறிப்பிடும் பகுதியில் வீட்டு வசதி வாரியம் முலம் வீடுகள் கட்டுகிறோம்.

மேலும், கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தது. அவற்றில் 2,212 வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

மேலும், வீட்டுவசதி வாரியம் கட்டிய வீடுகளில் விற்காத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News